தோனி புத்த மதத்திற்கு மாற்றமா! உண்மை என்ன?

Update: 2021-03-15 07:11 GMT

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது புதிய ட்ரெண்ட் ஹேர் ஸ்டைல் மற்றும் தோற்றங்களால் இளைஞர்களிடையே புதிய ட்ரெண்டை உருவாக்கி வந்துள்ளார். ஆனால் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் ஒரு துறவி போலத் தோற்றமளித்துள்ளார். அது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அதை வைத்துப் பல நெட்டிசன்கள் முன்னாள் பேட்ஸ்மேன் புத்த மதத்திற்கு மாறியதாக விமர்சித்து வருகின்றனர்.


பல பேஸ்புக் பயனாளர்கள் அதனைப் பகிர்ந்து வருகின்றனர். அதில், "முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மற்றும் உலகக் கோப்பையை வென்றவருமான மகேந்திர சிங் தோனி புத்த மதத்திற்கு மாறிவிட்டார். புத்தம் சரணம் காச்சஹ்மி," என்ற கூற்றுடன் பரப்பி வருகின்றனர்.

இது குறித்து ஆராய்ந்த இந்தியா டுடே, தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தின் மீது வரும் குற்றச்சாட்டுகள் போலியானது என்பதைத் தெரிவித்துள்ளது. தோனியின் துறவி போன்ற தோற்றம் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' யின் புதிய பிரச்சாரத்துக்கானது என்பதைத் தெரிவித்துள்ளது. மக்களின் பார்வைகளை வரவேற்று தோனியின் இந்த புகைப்படம் மற்றும் வீடீயோவை அந்த சேனல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது

ஏற்கனவே தோனியின் இந்த புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையில் இது ஸ்டார் ஸ்போர்ட்ஸின் புதிய பிரச்சாரத்துக்கு ஆகும். துறவி போன்று தோற்றமளித்து மக்களிடம் 'கிரிக்கெட்டின் புதிய அவதாரம்' குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பது போல் அது இருக்கும். மேலும் ஏப்ரல் 9 முதல் இந்திய பிரிமீயர் லீக் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகவுள்ளது.

இது குறித்து தோனியின் நெருங்கிய நண்பரான அருண் பாண்டேவிடம் கேட்டபொழுது, தோனி புத்த மதத்திற்கு மாறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். மேலும், "இது ஸ்டார் ஸ்போர்ட்ஸின் புதிய விளம்பரம் வேறு எதுவும் இல்லை," என்பதை அவர் குறிப்பிட்டார்.


எனவே தோனி புத்த மதத்திற்கு மாறிவிட்டார் என்று கூறிவரும் குற்றச்சாட்டுகள் தவறானது ஆகும். தற்போது வைரலாகி வரும் புகைப்படம் வரவிற்கும் IPL தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்யும் ஒரு பிரச்சாரமாகும்.

Similar News