பா.ஜ.கவினர் காங்கிரஸில் இணைந்தார்களா? வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பல விமர்சனங்களையும் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் பெரும் பின்னடைவையும் பா.ஜ.க சந்தித்தது. பஞ்சாபில் ஏழு நகராட்சியிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அந்த புகைப்படத்தில் தற்போது பஞ்சாபில் இருந்த மூன்று பா.ஜ.க MLA களும் காங்கிரஸில் இணைந்ததால் தற்போது பஞ்சாப் மாநிலம் பா.ஜ.க இல்லாத மாநிலமாக மாறிவிட்டது என்று கூறப்பட்டிருந்தது. பேஸ்புக்கில் போடப்பட்டிருந்த அந்த இடுக்கில், "பஞ்சாபின் மூன்று பா.ஜ.க MLA களும் INC இணைந்ததால் தற்போது பஞ்சாப் பா.ஜ.க அற்ற மாநிலமாக மாறிவிட்டது," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தி குறித்த உண்மையைக் கண்டறிந்த இந்திய டுடே, இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது என்பதைக் கண்டறிந்துள்ளது. தற்போது பஞ்சாபில் பா.ஜ.க வை சார்ந்த இரண்டு MLA கள் உள்ளனர், இருவரும் தாங்கள் இன்னும் பா.ஜ.க வில் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த புகைப்படம் பல்வேறு இடுக்குகளிலும் காணப்பட்டது.
பஞ்சாபில் உள்ள பா.ஜ.க MLA கள் காங்கிரஸில் இணைந்ததாக எந்த செய்தி அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் பஞ்சாப் சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், மாநிலத்தில் அருண் நரங் மற்றும் தினேஷ் சிங் என்ற இரண்டு பா.ஜ.க MLA உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது பரபரப்பாக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அருண் நரங், "இந்த செய்தியில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. முதலில் பஞ்சாபில் இரண்டு பா.ஜ.க MLA களே உள்ளனர் மூன்று இல்லை. 2017 தேர்தலில் மூன்று MLA கள் இருந்தனர். இருப்பினும் சோம் பிரகாஷ் அவர்கள் ராஜினாமா செய்து 2019 தேர்தலில் கலந்து கொண்டார்," என்று கூறினார்.
பஞ்சாபில் உள்ள மற்றொரு MLA தினேஷ் சிங், "நான் மூன்று முறை பஞ்சாபில் MLA வாக உள்ளேன் மற்றும் தற்போது கூட நான் பா.ஜ.க வில் இருக்கிறேன். நான் காங்கிரஸில் இணைந்து விட்டேன் என்று கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது ஆகும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து எந்த பா.ஜ.க MLA களும் காங்கிரஸில் இணையவில்லை என்பதைக் கூறியுள்ளனர். எனவே தற்போது வைரலாகி பட்டுவரும், குற்றச்சாட்டான மூன்று பஞ்சாப் பா.ஜ.க MLA களும் காங்கிரஸில் இணைந்துவிட்டனர் என்பது முற்றிலும் தவறான செய்தியாகும்.