மீண்டும் கர்நாடகாவில் முழு ஊரடங்கு - உண்மை என்ன?

Update: 2021-03-18 03:59 GMT

கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்றுநோயால் பல்வேறு வதந்திகள் மற்றும் போலி செய்திகள் பரவ தொடங்கியுள்ளன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயால் முழு ஊரடங்கு விதித்து புதிய வழிகாட்டுதல்களைக் கர்நாடக முதலமைச்சர் வெளியிடுவது போல் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அது பழைய வீடியோ என்று புதன்கிழமை அன்று மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அது கடந்த ஆண்டு உணவகங்கள் மற்றும் பப்கள் போன்றவற்றிற்குத் தேசிய அளவில் கட்டுப்பாடுகள் விதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து புதன்கிழமை அன்று கர்நாடக துணை முதலமைச்சர் CN அஸ்வந்த் நாராயணன் இந்த செய்தி புதிதாகக் கூறப்பட்டது இல்லை என்பதைத் தெரிவித்தார்.

சில மாநிலங்களில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியுடனான வீடியோ கான்பிரன்சில் எடியூரப்பா கலந்து கொண்டார். அதிகரித்து வரும் எண்ணிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊரடங்கு தவிர, மக்கள் முககவசங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் பெங்களூரு , கலபுராகி மாவட்டம் மாற்றும் மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பீட்டர் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனமாகக் கண்காணிக்கப் பிரதமர் அறிவுறுத்தியதாகவும் கூறினார். "கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்தது. மேலும் டிசம்பர் காலங்களில் விரைவாகக் குறையத் தொடங்கியது. கடந்த பத்து நாட்களாக மீண்டும் தொற்றுநோய் அதிகரித்துள்ளது," என்று தெரிவித்தார்.


பிரதமரை முன்னிறுத்தி கொரோனா தடுப்பூசி தேவைக்கேற்ப வழங்கப்படுவதாகவும் மற்றும் கொரோனாவை கட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியும், அதனை முற்றிலுமாக அகற்ற முடியாது என்பதை எடியூரப்பா தெரிவித்தார்.

Similar News