காயத்திரி மந்திரம் குறித்து அவுட் லுக் வெளியிட்டுள்ள சர்ச்சை தலைப்பு- உண்மை என்ன ?

Update: 2021-03-21 01:15 GMT

அவுட்லுக் செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "காயத்திரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியுமா? என்ற தலைப்பில் வெளியிட்டது. 

இதனை கண்டுபிடிக்க AIIMS ரிஷிகேஷ்க்கு அரசாங்கம் ஒத்துழைப்பு அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது AIIMS மருத்துவமனையில் ரிஷிகேஷால் மேற்கொள்ளப்பட்ட 14 நாட்கள் சோதனை திட்டமாகும், இதில் கொரோனா தொற்றுநோயால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகளுடன் காயத்திரி மந்திரத்தை உச்சரித்து பிராணாயாமவை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.




 இந்த செய்திக் கட்டுரைக்கு உள்ளே இது ஒரு சோதனை திட்டம் என்று குறிப்பிட்டிருந்தாலும், அதன் தவறான தலைப்பால் காயத்திரி மந்திரத்தைப் பயன்படுத்துவது கொரோனா சிகிச்சையின் மற்றொரு வழி என்று படிப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறது.



இந்த செய்தியை அவுட்லுக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில மணிநேரத்திலேயே, சமூக ஊடக பயனாளர்கள் பலர் அந்த தலைப்பை மட்டும் தவறாகப் புரிந்து கொண்டு பகிரத் தொடங்கினர். மேலும் அவர்கள் இதற்காக மத்திய அரசாங்கத்தையும் கேலி செய்யத் தொடங்கினர்.



நுரையீரலை வலுப்படுத்துவதற்கு மற்றும் சுவாச நோய்க்கு எதிராக போராடுவதற்கும் பிராணாயாம என்பது ஒரு யோகா பயிற்சி மற்றும் அது பயனளிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும் அனைவரும் அறிவர். கொரோனா தோற்று நேரடியாக நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் இதுபோன்ற சுவாச பயிற்சிகள் பயனளிக்கும் என்பது பொது அறிவாக உள்ளது.



மேலும் காயத்திரி மந்திரம் கூறுவதன் மூலம் ஒருவரின் மனநிலை மற்றும் ஆன்மாவை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உடலில் உள்ள சோர்வையும் மற்றும் மனச்சோர்வையும் நீக்குகிறது. இது மீண்டும் கொரோனா நோயாளிகளுக்குப் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கிறது. பாதிப்படைந்தவர்களைத் தனிமைப் படுத்துவதால் அவர்களுக்கு மனவழுத்தம், வருமான கவலை, பயம் உள்ளிட்டவற்றால் மீண்டும் தொற்றை அதிகரிக்கச் செய்கிறது.



எனவே நோயாளிகளுக்கு மன அழுத்தச் சிக்கலைக் குறைக்க இதுபோன்று காயத்திரி மந்திரம் மற்றும் பிராணாயாம ஒரு சிறந்த பயிற்சியாகும். ஆனால் இதுமட்டுமே சிகிச்சை என்று மத்திய அரசாங்கம் மாற்றவில்லை இது ஒரு கூடுதல் சிகிச்சையாகவே அறிமுகப்படுத்த முயற்சியை மேற்கொள்கிறது.




AIIMS மருத்துவமனையில் ரிஷிகேஷ், கொரோனா பாதிக்கப்பட்ட 20 நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து A மற்றும் B குழுக்களாகப் பிரித்தார். 

இது 14 நாட்கள் மேற்கொள்ளப்படும் சோதனை திட்டமாகும். குழு A வில் உள்ள பத்து நோயாளிகள் வழக்கமான கொரோனா சிகிச்சையுடன், காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கச் செய்து, காலை மற்றும் மாலை வேளையில் பிராணாயாம பயிற்சியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். குழு B யில் பத்து நோயாளிகளுக்கு வழக்கமான கொரோனா சிகிச்சை மட்டும் வழங்கப்பட்டது.

இந்த 14 நாட்கள் நீண்ட சோதனையில் இரு குழுவில் உள்ளவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து ஒப்பிடப்படும். மேலும் இந்த ஆய்வுக்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (DST) நிதியுதவி அளித்துள்ளது.

Similar News