விடுதலை சிறுத்தை கட்சிக்காக சமூக வலைத்தளத்தில் போலி செய்தி பரப்பும் அரசு பள்ளி ஆசிரியை - தி.மு.க ஆதரவாளர்களின் தந்திரம்!

Update: 2021-03-23 01:45 GMT

சமூக வலைதளங்களில் பகிரப்படும் முக்கல்வாசி தகவல்கள் உறுதிபடுத்தப்படாதவையாகவும், உண்மை தன்மை குறித்து ஆராயப்படாமல் பகிரப்பட்டு வருகின்றன. சமூக வலைதளம் குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் வதந்திகளை பரப்புவதை ஒரு விதமாக எடுத்துக்கொண்டாலும், நன்கு படித்து அரசு பணியில் உள்ள சிலரும் வதந்திகளை பரப்பி வருவது, அவர்கள் எடுத்துள்ள நிலைப்பட்டை  உணர்த்துகிறது.

சமூக வலைதளங்களில் பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மகாலட்சுமி என்ற அரசுப்பள்ளி ஆசிரியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு நிலைபாட்டை கையில் எடுத்து அவர்களுக்கு சாதகமான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஆளும் கட்சியை விமர்சித்து பதிவிட்டு வந்த அவர், தற்போது சமூக வலைதளங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக பரவி வரும் வதந்திகளை பதிவிட்டு, எதிர்மறை கருத்துகளை பரப்பி வருகிறார்.

அந்த வகையில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றப்படுவதாக, பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக கூறி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



 இதன் உண்மை தன்மை குறித்து, ஆராய தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தேடிப்பார்த்தோம். அதில் கீழ்கண்டவாறு தகவல் அடக்கிய போஸ்டர் மட்டுமே பகிரப்பட்டிருந்தது.



மேற்கண்ட தகவல் அடங்கிய படத்தை எடிட் செய்து, தவறான தகவலை பரப்பும் நோக்கில் முகநூலில் பதிவிட்டுள்ளார் அரசு பள்ளி ஆசிரியை. ஆளும் அரசுக்கு எதிராக எந்த தகவல் பரவினாலும், அதன் உண்மை தன்மை குறித்து ஆராயாமல் மக்களிடம் தவறான தகவலை கொண்டு சேர்க்கும் நோக்கில் திமுக மற்றும் திமுக கூட்டணி ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Similar News