மார்பிங் செய்யப்பட்டு தவறான குற்றச்சாட்டுகளுடன் வலம்வரும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா புகைப்படம்!

Update: 2021-03-25 01:30 GMT

மேற்கு வங்காளத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க மீதுள்ள நற்பெயரைக் கெடுப்பதற்காக பல்வேறு போலி செய்திகளை மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். 

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் தலையில் வெள்ளை தொப்பி அணிந்திருப்பது போல் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. மேலும் பா.ஜ.க தலைவர்கள் மேற்கு வங்காள தேர்தலுக்காக புதிய அரசியல் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.




 இது குறித்து இணையத்தில் ஆராய்ந்த போது, இதே போன்று புகைப்படம் 2019இல் நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையில் காணப்பட்டது. அந்த செய்தி அறிக்கையில், "டெல்லியில் முன்னாள் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்," என்று கூறப்பட்டிருந்தது, மேலும் கிரெடிட் PTI க்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் அவர்கள் மதம் சார்ந்த தொப்பி அணிந்திருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்டுள்ளது.




அதே அசல் புகைப்படம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கையிலும் காணப்பட்டது. அதன் பின்புறம் மற்றும் பிரதமரின் உடைகளைக் கவனித்த பிறகு தற்போது வைரலாகி வரும் புகைப்படத்துடன் ஒத்துப்போகிறது. எனவே இங்கிருந்து அது மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அது தவறான குற்றச்சாட்டுகளுடன் வலம்வந்து கொண்டிருக்கின்றது.

எனவே தற்போதைய மேற்கு வங்காள தேர்தலுக்காகப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் மதம் சார்ந்த தந்திரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் போலியானது ஆகும்.

Similar News