பங்களாதேஷில் மோடி எதிர்ப்பு ஊர்வலமா? வலம் வரும் தவறான புகைப்படங்கள்!

Update: 2021-03-26 01:15 GMT

மார்ச் 26 இல் பங்காளதேசம் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுவிழாவைக் கொண்டாடவுள்ள நிலையில் பிரதமர் மோடி பங்காளதேஷ்க்கு செல்லவுள்ளார். மேலும் அவர் 'பங்கபந்து' ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் அவரது பிறந்தநாள் விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார். தொற்றுநோய் காலகட்டங்களுக்குப் பிரதமர் வெளிநாட்டுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும்.



அதே சமயத்தில் சமூக வலைத்தளங்களில் மக்கள் போராட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் மாஷால்லாஹ்! டாக்காவில் மோடி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிவிட்டது. இஸ்லாமியக் கட்சிகள் தேச பக்தியும் மற்றும் மதமும் தங்கள் இதயத்தில் இருப்பதை நிரூபித்து விட்டனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் டாக்காவில் மோடி எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது என்று கூறப்படுவது பொய்யான செய்தியாகும். இதே புகைப்படத்தைக் கூகுளில் ஆராய்ந்த போது அக்டோபர் 2020 தேதியைக் குறிப்பிட்டு, "டாக்காவில் பங்களாதேஷ் மக்கள் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்கு எதிராகப் போராட்டம்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"பிரான்ஸ்கு எதிராக பங்களாதேஷ் போராட்டம்" என்று தேடிய போது, பல செய்தி அறிக்கைகள் காணப்பட்டது. அதில் பங்களாதேஷில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் பிரான்ஸ் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல மக்களின் கையில், பிரான்ஸை புறக்கணிப்போம் மற்றும் உலகில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றாக நிற்போம் என்று எழுதியிருந்த பதாகையை ஏந்தி இருந்தனர்.



போராட்டக்காரர்கள் பிரான்ஸ் அதிபரை இழிவுபடுத்தும் வகையில் பல சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட் முதலியவற்றை ஏந்தியிருந்தனர். எனவே தற்போது வைரலாகி புகைப்படம் 2020 இல் பிரான்ஸ்கு எதிராக நடத்திய போராட்டமாகும். தற்போது குற்றம்சாட்டி வருவது போல 2021 இல் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் இல்லை.

Similar News