தி.மு.க-விற்கு தான் வாடகை மூளை தேவையிருக்கிறது என்றால், கூட்டணி கட்சிகளுக்குமா? வதந்தியை வாந்தி எடுக்கும் கொ.ம.தே.க!

Update: 2021-04-03 06:31 GMT

தமிழகத்தின் பெயர் மாற்றப்படும் என பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் பேசியது கண்டிக்கத்தக்கது என இணையத்தில் வந்த வதந்தி செய்தியை பார்த்து, கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் தமிழ்நாடு என்ற பெயரை 'தட்சிண பிரதேஷ்' என மாற்றுவோம் என அறிவித்திருக்கிறார்கள். 'தமிழ்நாடு' என பெயர் மாற்ற நம் முன்னோர்கள் எவ்வளவு போராடியிருக்கின்றனர்.

பெயர் மாற்ற முயற்சியில் ஈடுபட்டால் அதற்கான தாக்கத்தை பாதிப்பை இவர்கள் உணர்ந்தே தீருவார்கள். ஒருநாளும் 'தமிழ்நாடு' பெயரை பாஜக மாற்ற முடியாது. மீறி முயற்சித்தால் தமிழ்நாடு பற்றிஎரியும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இணையத்தில் பரப்பப்படும் போலி தகவல்கள், உருட்டல்களைக் கண்டு பல கட்சி அபிமானிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கு தொடருவோம் என்று அன்பாக மிரட்டுகிறார்கள்.


இங்கு பாஜகவோ, பிரதமரோ, உ.பி முதல்வரோ சொல்லாத ஒரு விஷயத்தை திரித்து சமூக ஊடகங்களில் பரப்பிய பொய்யை ஒருவர் உண்மை போல பேசுகிறார். 

பொதுவாக திமுகவின் வாடகை மூளை நிறுவனமான ஐ-பேக் ஆட்கள் தான் இது மாதிரியான போலி செய்திகளை பரப்புகின்றனர். அதனை கூட்டணி கட்சி தலைவரே பார்த்து உண்மை என நம்பும் அளவுக்கு செய்திகளை திரிக்கிறார்கள் என்றால், இவ்வளவு காலம் தமிழக மக்களை எவ்வளவு ஏமாற்றி இருப்பார்கள் என்பதை யூகித்துக்கொள்ளலாம்.  

Similar News