தாஜ்மஹால் உள்ளிட்ட வரலாற்றுத் தளங்களைக் குத்தகைக்கு விட அரசாங்கம் முடிவா - உண்மை என்ன?
சமூக ஊடகத்தில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதில் இந்தியாவில் தாஜ்மஹால் உள்ளிட்ட 100 வரலாற்று மற்றும் பாரம்பரிய தளங்கள் அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்படுகின்றது என்று சமூக ஊடக இடுக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வைரல் குற்றச்சாட்டு சில செய்தி தளங்களிலும் காணப்பட்டது, அதில் அரசாங்கம் இதுபோன்ற வரலாற்றுத் தளங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் 25,000 கோடி ஈட்டத் திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதன் ஸ்க்ரீன் ஷாட்கள் பல்வேறு ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியும் அரசாங்கத்தைத் தாக்கியது. "யார் நாட்டை விற்க மாட்டேன் என்று குரலெழுப்பி வந்தார்களோ, அவர்களே தற்போது நாட்டில் உள்ள அனைத்தையும் குத்தகைக்கு விட உள்ளனர்," என்று குற்றம் சாட்டினர்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டு குறித்து உண்மை கண்டறியும் குழு சரிபார்த்த போது, இது போலியான இடுக்கு என்றும் மற்றும் இதுபோன்ற ஒரு முடிவைக் கலாச்சார துறை அமைச்சகம் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டது. இந்த குற்றச்சாட்டை மறுத்து PIB டிவிட்டரில் ஒரு செய்தியையும் வெளியிட்டது,"இந்தியாவில் தாஜ்மஹால் உள்ளிட்ட 100 வரலாற்று கட்டிடங்களை அரசாங்கம் குத்தகைக்கு விடப்போவதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் கலாச்சார துறை அமைச்சகம் இதுபோன்று வரலாற்று இடங்களைக் குத்தகைக்கு விட முடிவு எடுக்கவில்லை," என்று கூறியிருந்தது.