இன்போசிஸ் அறக்கட்டளை 'சர்ச்சைக்குரிய' ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு ஆதரவளிக்கிறது உண்மையா?

Update: 2021-04-07 05:23 GMT

சமூக ஊடகங்களில் கல்வி சம்பந்தமான நிதி வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்த தவறான செய்தி அதிகமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. தற்போது அதுபோன்று ஒரு வாட்ஸ்ஆப் செய்தியாக, நிதிநிலை கம்மியாக இருக்கும் மாணவர்களுக்கு உதவத் தன்னார்வ தொண்டு நிறுவனமான ப்ரேரணாவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தது.


மேலும் அந்த தொண்டு நிறுவனம் இன்போசிஸ் அறக்கட்டளையுடன் தொடர்பில் உடையது என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு முடித்து அதில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்த செய்தி போலியானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. இன்போசிஸ் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை எதுவும் ஆதரிக்கவில்லை. மேலும் அந்த வைரல் செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த அந்த மூன்று போன் நம்பர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, அது எதுவும் செயலில் இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்த செய்தியின் தொடர்புடைய சொற்களை இணையத்தில் தேடியபோது, 2010யில் இருந்து இதுபோன்ற செய்தி பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதுமூலம் தற்போதைய செய்தி இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்னர் இந்த செய்திகளைத் தவறானது என்று பல செய்தி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தன்னார்வ தொண்டு நிறுவனமான ப்ரேரானா பெங்களூருவில் நிதியில் பிற்பட்டு இருக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் CEO ராம் சாஸ்திரியை தொடர்பு கொண்டபோது, இதே வைரல் செய்தி கடந்த எட்டு ஒன்பது ஆண்டுகளாகப் பகிரப்பட்டு வந்துள்ளது என்று கூறினார். இன்போசிஸ் நன்கொடையாளராக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது, தற்போது அது NGO விற்கு ஆதரவளிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். தற்போது வைரல் செய்தி நீண்ட நாட்களுக்குச் செல்லுபடியாகாது என்றும் அவர் தெரிவித்தார்.


எனவே NGO ப்ரேரணா, இன்போசிஸ் அறக்கட்டளையால் ஆதரவளிக்கப்படவில்லை. இந்த குறிப்பிட்ட திட்டம் நீண்ட காலமாகச் செயலில் இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு வேறு விதங்களில் உதவுகிறது.

Similar News