கும்பமேளா குறித்து தவறான செய்தியைப் பரப்பும் இந்தியா டுடே-பின்னணி என்ன?
ஏப்ரல் 6 இல் இந்தியா டுடே ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது அதில் கும்பமேளா நிகழ்வு கொரோனா தொற்றின் சூப்பர் ஸ்ப்ரேடராக மாறிவருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியதாகக் கூறி வந்தது. இது வெளியிட்டுள்ள தலைப்பின் மூலம் கும்பமேளா ஏற்கனவே கொரோனா தொற்றின் சூப்பர் ஸ்ப்ரேடராக மாற்றிவிட்டதாகத் தோற்றமளிக்கிறது.
மேலும் அந்த செய்திக் கட்டுரை கூற்றுப்படி, தற்போது ஹரித்துவாரில் நடந்து கொண்டிருக்கும் கும்பமேளா ஒரு சூப்பர் ஸ்ப்ரேடர் நிகழ்வாக மாறி வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்ததாகத் தெரிவித்தார். இதன் பிறகு உடனடியாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் டிவிட்டரில் இந்த செய்தி தவறானது என்று தெரிவித்தது.
இந்த அறிக்கையானது ஏப்ரல் 6 இல் சுகாதார அமைச்சகம் செய்தியாளர்களின் சந்திப்பின் அடிப்படையில் உள்ளது. சந்திப்பின் போது ஒரு பத்திரிகையாளர் அமைச்சகத்திடம் கும்பமேளா ஒரு சூப்பர் ஸ்ப்ரேடராக மாறுவதற்கு ஏதேனும் அறிகுறி உள்ளதா மற்றும் அதனைத் திட்டமிட்டதற்கு முன்னரே முடிக்கத் திட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, "கும்பமேளா நிகழ்வு எப்போதும் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை. நாடாகும் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அது ஏற்கனவே ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது," MoHFW அமைச்சர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். மேலும்," இந்த நிகழ்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கனவே ஒரு அறிக்கை SOP யால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாநில அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பும் நடைபெற்றது. அதில் Dr பல்ராம் மற்றும் Dr பால் போன்றோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு குறித்த வழிமுறைகள் மாநில அரசுடன் பகிரப்பட்டது," என்றும் அவர் குறிப்பிட்டார்.