மும்பையில் மக்கள் கூட்ட நெரிசல் வைரல் வீடியோ உண்மையா?

Update: 2021-04-11 07:44 GMT

தற்போது கொரோனா தொற்றுநோயின் இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்(CST) யில் அதிக மக்கள் கூட்டம் கூடியிருப்பதாகக் குற்றம் சாட்டி சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வில்லை என்று நெட்டிசென்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்த வீடியோ குறித்த உண்மையைக் கண்டறிந்த உண்மை கண்டறியும் குழு PIB, "இது பழைய வீடியோ, தற்போது இது புதிய தேதியிட்டு பகிரப்பட்டு வருகின்றது," என்று தெரிவித்ததது.


மேலும் PIB வெளியிட்டிருந்த ட்விட்டை, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே மற்றும் வடகிழக்கு எல்லை ரயில்வே அதனைப் பகிர்ந்து, "இது பழைய வீடியோ மற்றும் அது தற்போதைய தேதியிட்டு பகிரப்பட்டு வருகின்றது. இதுபோன்ற வீடியோவை பகிர்வதைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் வந்தந்திகளை நம்புவதைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறோம்," என்று கூறியிருந்தது.




எனவே தற்போது வைரலாக்கப்பட்டு வரும் வீடியோ தவறானது ஆகும். இது பழைய வீடியோ மற்றும் போலி குற்றச்சாட்டுடன் வலம் வருகின்றது.

source: https://newsmeter.in/fact-check/fact-check-video-of-mumbais-crowded-chhatrapati-shivaji-maharaj-terminus-is-from-last-year-676677

Similar News