கொரோனா தடுப்பூசி போட வாட்ஸ்ஆப் முன்பதிவு - வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-04-12 12:46 GMT

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா மிக விரைவாகத் தடுப்பூசி வழங்கும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடு கொள்வது தொடர்பாகப் பரவும் வதந்திகளை நம்பி வருகின்றனர்.


அதே போன்று ஒரு வைரல் செய்தியாக வாட்ஸ்ஆப் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்வதற்கான ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் ஆணையத்தின் அரசாங்க எண்ணும், மேலும் ஒரே நேரத்தில் நான்கு இடத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. பயனாளர்கள் தங்கள் பெயர், வயது, ஆதார் எண் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.


"45 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் இரண்டு டோஸ் செலுத்தப்படுகின்றது," என்று அந்த வைரல் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த வைரல் செய்தியைப் போலி என்று தெரிவித்து, மக்கள் முன்பதிவு செய்ய CoWIN போர்டல் அல்லது ஆரோக்கிய செயலில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்து PIB ஒரு ட்விட்டை வெளியிட்டது.

திங்கட்கிழமையில் நிலவரப் படி, 24 மணி நேரத்திற்குள் 1.68 லட்சம் புதிதாகப் பாதிக்கப்பட்ட தொற்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. கடந்த அண்டை ஒப்பிடுகையில் இதுவே ஒரே நாளில் அதிகளவில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையாகும். இந்தியாவில் தொடர்ந்து 1 லட்சத்திற்கும் மேலாகத் தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்திருப்பது 6 வது நாளாகும்.


இதுபோன்று வதந்திகளை உடனே நம்பவேண்டாம் என்று PIB மக்களைப் பலமுறை எச்சரித்து வந்துள்ளது. மேலும் இதுபோன்று செய்திகள் பரப்பும் போது அதுகுறித்த உண்மையை அரசாங்க வளைத்ததில் சரிபார்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Source: இந்தியா டிவி 

Similar News