கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகப் பாதித்த தொற்றின் எண்ணிக்கை 13,000 ஆகப் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரப் பிரதேசத்தில் நொய்டா, கிரேட்டர் நொய்டா, லக்னோ, கான்பூர் மற்றும் வாரணாசி போன்ற மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மற்றும் வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதில் உத்தரப் பிரதேசத்தில் வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பயனர்கள் செய்தி தளங்களின் ஸ்கிரீன் ஷாட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதனை உத்தரப் பிரதேசத்தின் உண்மை கண்டறியும் குழு இது குறித்து ஒரு ட்விட்டை வெளியிட்டது. அதில் தற்போது வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்தி போலியானது மற்றும் அதுபோன்ற உத்தரவு எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டது.
இந்த வகையான தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு உண்மை சரிபார்க்கும் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கட்கிழமை அன்று இதுபோன்று ஊரடங்கு விதிப்பது ஒரு விருப்பமாக இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வர் யோகி, மக்களைத் துயரத்தில் இறக்க விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
source: https://www.dnaindia.com/india/report-fact-check-will-lockdown-be-imposed-in-uttar-pradesh-know-details-here-2886036/amp