மார்ச் 1 முதல் 100 ரூபாயாகிறதா பால் விலை? வதந்திகள் உண்மையா?

Update: 2021-03-03 01:30 GMT

தற்போது கிடுகிடுவென உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்கனவே சாமானியர்கள் பாதிப்பில் இருக்கின்ற நிலையில், மார்ச் 1 முதல் பால் விலையில் கூட 100 ரூபாய் வைத்து விற்கப்படும் என்று ஒரு செய்தி பரவ தொடங்கியது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பியது.



சாமானியர்களிடையே இந்த செய்தி பதற்றத்தை உண்டாக்கியதற்கு முக்கிய கட்டணம் பால் அத்தியாவசிய தேவையில் ஒன்றாகும். கடந்த வார இறுதியில் இந்த செய்தி டிவிட்டரில் ட்ரெண்டாக தொடங்கியது. மேலும் நெட்டிசன்கள் பலர் பால் விலை உயரப்போகிறதா என்று பல கேள்விகளை முன்வைக்கத் தொடங்கினர்.


இந்த பரபரப்பு குற்றச்சாட்டானது, இந்தி செய்தித் தாள் ஒன்றில், அதிகரித்துவரும் எரிபொருள் விலையை எதிர்த்துப் போராடப் பால் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கப்போவதாக மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், அரசாங்கம் விவசாய போராட்டத்தை எதிர்கொள்ள எரிபொருள் விலையை அதிகரிக்கின்றன, எனவே விவசாயிகள் அதனை எதிர்கொள்ளப் பால் விலையை அதிகரிக்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.


அந்த செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் வழக்கம் போல் டிவிட்டரில் அதனை ஹாஸ்டாக் ஆகா பரப்பத் தொடங்கினர்.

இருப்பினும், அந்த அறிக்கை தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பதற்கான எந்த வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும் சம்யூட் கிசான் அமைப்புகள் போன்ற விவசாய அமைப்புகள், பால் விற்பனையைப் புறக்கணிக்கவும் மற்றும் பால் 100 ரூபாய்க்கு விற்கவும் எந்த அழைப்பும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தி அறிக்கையில் தெரிவித்தது.

Similar News