கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தி.மு.க அரசு ரூ.10 லட்சம் பணம் கொடுக்குமா?
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்குச் சொந்தமான இடத்தில் அகமது இப்ராஹிம், என்பவர் நாட்டு வைத்தியம் பார்க்கும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
இப்ராஹிம், கிளினிக் முன்பாக எல்.இ.டி., விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், கடை விளம்பரத்தை ஒளிர செய்திருக்கிறார்.
இதனை யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஹேக் செய்து, அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள்; தி.மு.க., அரசால் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 10 லட்சம் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார்.
இதுபற்றி இப்ராஹிம் கிளினிக்கில் பணிபுரியும் கரீம் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஹேக்கிங் முறையில் நிகழ்ந்த தவறு என கூறுகின்றனர். இப்படி யாரும் விளம்பரம் செய்யவில்லை.
Input From: factcrescendo