எப்படி சார் இப்படி பொய் சொல்றீங்க? 10 வருஷமா தியேட்டர் போகலயா? விசிக எம்பி ரவிக்குமாரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்து தனது படங்களில் மாரி செல்வராஜ் பதிவு செய்து வருகிறார். நிச்சயமான இந்த படமும் நல்ல படமாக இருக்கும்.
பட்டியலின மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை மாரி செல்வராஜ் திரையில் காட்டுவதன் மூலம் சமூகத்தில் மனமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. 20 சதவீதத்திற்கு மேல் பட்டியலின சமூகத்தை கொண்டுள்ள மாநிலத்தில், பட்டியலினத்தை சேர்ந்தவர் முதலமைச்சராகியுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலை உருவாகவில்லை என கூறியிருந்தார்.
பின்னர், " சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் இன்று தியேட்டருக்குச் சென்று மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இப்படியொரு படத்தைப் பார்ப்பதற்காகத்தான் 10 ஆண்டுகளும் காத்திருந்ததுபோல் இருந்தது" என டிவிட்டரில் பதிவிட்டார்.
ஆனால் இதே ரவிக்குமார் தான் 2018ல் நீண்டகாலத்துக்குப் பிறகு இன்று திரையரங்குக்குச் சென்று ‘பரியேறும் பெருமாள்‘ பார்த்தேன். அந்தத் திரைப்படம் குறித்து 17 ஆம் தேதி புதுச்சேரியில் தமுகஎகச நடத்தவுள்ள கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவேண்டும் என கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டு இடைவெளி, எப்படி பத்து ஆண்டு ஆனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.