கொரோனா தொற்றுநோயால் 10,133 நிறுவனங்கள் மூடல்! உண்மையா ?

Update: 2021-03-11 01:45 GMT

கடந்த ஆண்டு ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மார்ச் 9 இல் பல செய்தி நிறுவனங்கள் கொரோனா தொற்றுநோய் காரணமாக 10.113 மூடப்பட்டதாகச் செய்திகளை வெளியிட்டது. இந்த அறிக்கையானது மார்ச் 8 இல் மக்களவையில் நிதி மற்றும் கார்பொரேட் விவகாரத்துறை அனுராக் தாகூர் வெளியிட்ட அறிக்கையின் படி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் தானாக முன்வந்து மூடப்பட்டன என்றும் எந்த வித வற்புறுத்தலின் பெயரில் இல்லை என்பதையும் கூறியது.




 இந்த நிறுவனங்கள் மூடப்பட்ட காலகட்டத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலமாகும். இருப்பினும் மே மாதத்தில் ஊரடங்கு எளிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறுவனங்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கின. இருப்பினும் கொரோனா தொற்றுநோய் அச்சம் அதிகரிக்கத் தொடங்கியதால் மீண்டும் நிறுவனங்கள் மூடப்பட்டது.

மார்ச் 8, மாநிலங்கள் வாரியாக 2020-21 காலகட்டத்தில் வணிகத்திலிருந்து வெளியேறிய நிறுவனங்களில் பட்டியலைப் பாராளுமன்ற உறுப்பினர் பென்னி பெஹனன் கேட்டார். வணிகத்திலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் குறித்து எந்த பதிவையும் அமைச்சகம் பராமரிக்கவில்லை என்று அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் நிறுவனங்கள் சட்டம் 248(2) யின் கீழ் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.




 2020-21 நிதியாண்டில் மூடப்பட்ட நிறுவனங்கள் குறித்த மாநிலங்கள் அடிப்படையில் பட்டியலை தாகூர் வழங்கினார். டெல்லியில் மொத்தம் 2394 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, உத்தரப் பிரதேசத்தில் 1936 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் நிறுவனங்கள் சட்டம் 248(2) கீழ் ஒரு நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு வணிகத்தையும் மேற்கொள்ளாமல் இருப்பின் அது சட்டம் 455 யின் கீழ் ஒரு செயலற்ற நிறுவனத்தின் நிலையை பெரும். மேலும் அத்தகைய நிறுவனத்தை அரசாங்கம் மேற்கூறிய சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் செய்யும்.




 முதலில் வணிகத்தை நிறுத்தும் நிறுவனங்களில் பட்டியலை கார்பொரேட் விவகார அமைச்சகம் வைத்திருப்பதில்லை. சட்டத்தின் படி கூறப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் கூறப்பட்ட நிதியாண்டுக்கு முந்தைய காலாண்டில் எந்த வணிகமும் செய்யாததால் மூடப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டும் அந்த நிறுவனங்கள் எந்த வணிகமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊடகங்கள் கொரோனா தொற்றுநோயைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனைத்து 10,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் கொரோனா தொற்றுநோயால் மூடப்பட்டது என்பது தவறான குற்றச்சாட்டாகும். எனவே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போலியானது ஆகும்.

Similar News