ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத தி.மு.க அரசு - RTI தகவலில் அம்பலம்

Update: 2022-12-29 01:33 GMT

13 திட்டங்களுக்கு, கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 4 ஆயிரத்து 142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கல்வி சார்ந்த 33 திட்டங்களுக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அவற்றுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து மதுரையை சேர்ந்த ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த 33 திட்டங்களில் வெறும் 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, ஆயிரத்து 423 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு, கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.


Full View



Similar News