வேலைக்கு விண்ணப்பிக்க ₹1,675? மத்திய அரசின் இணையதளம் என்ற பெயரில் போலி தளம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (MGNREGA) அதிகாரப்பூர்வ இணையதளம் எனக்கூறி ஒரு போலியான இணையதள முகவரி மக்களிடையே பரப்பப் பட்டு வருகிறது.
அதனை யாரும் அணுக வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த இணையதளத்திற்கான இணைப்பு பாதுகாப்பானது அல்ல. மக்கள் அந்த இணையதளத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இணையதளத்தில் கடவுச்சொற்கள் மற்றும் வங்கித் தகவல் போன்ற முக்கியமான விவரங்களை உள்ளிடுவது மோசடி செய்ய உதவும் என கூறப்பட்டுள்ளது.
இதே போல https:// rashtriyavikasyojna.org என்ற இணையதளம் பல்வேறு பதவிகளுக்கான வேலைகளை வழங்குவதாகக் கூறி விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பதாரர்களிடமிருந்து ₹1,675 செலுத்த வேண்டும் என கூறுகிறது. அதுவும் போலியான தளம் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.