இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் ₹172 லட்சம் கோடியா? திமுக ஐடி விங் பரப்பும் தகவல்!
இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் ₹172 லட்சம் கோடியாக உயர்த்துவிட்டது என திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பாஜக தொழில்பிரிவு துணை செயலாளர் செல்வகுமார் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. குறிப்பாக சைனாவை விட வேகமாக வளர்கிறது இந்தியா.ஒரு நாட்டின் கடனை Debt to GDP Ratio என்ற குறியீட்டின் அடிப்படையில்தான் கணக்கிட வேண்டுமே தவிர, மொத்த தொகையை வைத்து அல்ல.
அதிக கடன் உள்ள நாடுகள் (Debt to GDP Ratio) IMF தரவுகளின்படி
ஜப்பான் : 214%
இத்தாலி : 141%
அமெரிக்கா : 110%
இங்கிலாந்து : 101%
பிரான்ஸ் : 92%
பிரேசில் : 81%
இந்தியா : 57%
இந்த கடன் கூட 2014ல் 51% ஆக இருந்தது, கோவிட் தொற்றுக்கு முன் 2019ல் 48% ஆக குறைக்கபட்டது. கோவிட் காலத்தில் இதுவே 61% ஆக உயர்த்து தற்போது மீண்டும் 57% ஆக குறைந்துள்ளது.
கோவிட் காலத்தில் (2020, 2021, 2022 என 3 ஆண்டுகள்) கடன் உயர்ந்ததற்கு காரணம்
உணவு மானியம் = ₹10 லட்சம் கோடி
உர மானியம் = ₹5.0 லட்சம் கோடி
தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன், PF, இதர சலுகைகள்
அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் என இன்னும் பல திட்டங்கள் காரணமாகும் என செல்வகுமார் கூறியுள்ளார்.