நீதி தாமதம், ஆனால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையா குற்றச்சாட்டுகள் உண்மையா ?

Update: 2021-03-09 01:15 GMT

 தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக வலம்வரும் ஒரு புகைப்படத்தில், தடை செய்யப்பட்ட அமைப்பான SIMI தொடர்பிருந்ததாகக் கூறி 122 முஸ்லீம்கள் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பின்பு தற்போது குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்ற குற்றச்சாட்டுடன் அந்த புகைப்படம் தென்பட்டது.




 டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில், குற்றம் செய்யாமல் இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். SIMI யில் தொடர்பிலிருந்ததாக கூறி 2001யில் சூரத்தில் வைத்து 122 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டனர். "அரசாங்கம் அவர்கள் SIMI யில் தொடர்பிலிருந்ததற்கான நம்பகமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டது," என்று நீதிமன்றம் கூறியது, இதுவே தற்போது ஜனநாயகத்தில் நீதிமன்றம் செயல்படும் தன்மை என்று குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்த உண்மையைக் கண்டறிந்த இந்தியா டுடே, 2001 இல் குற்றம் சாட்டப்பட்ட 122 முஸ்லீம்களும் சமீபத்தில் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் 20 முழுவதும் சிறையில் கழிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தது. சிறையில் இருந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பெயிலில் வெளியில் வந்தனர்.

UAPA கீழ் குற்றம் சாட்டப்பட்ட அந்த 122 முஸ்லீம்கள் நம்பகத்தனமான ஆதாரங்களை அரசாங்கம் சேமிக்கவில்லை என்பதை நீதிமன்றம் கவனித்தது. இதுகுறித்த செய்தியைத் தேசிய ஊடகங்கள் பரவலாக அறிவித்தன. இருப்பினும் இதைக் கண்டறிய 20 ஆண்டுகள் ஆனதால் சமூக ஊடகங்களில் நீதித்துறை குறித்த குற்றச்சாட்டுகள் எழ தொடங்கின.




 இதுபோன்ற குற்றச்சாட்டுடன் வந்த ஒரு ட்விட்க்கு பதிலளித்த மூத்த IPS அதிகாரி அருண் போத்ரா, "நீதிமன்றம் இதைக் கண்டறிய 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதற்காக அவர்கள் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறவில்லை. அனைவரும் பெயிலில் வெளியில் இருந்தனர். தவறாகக் குற்றம் சாட்டப்படுவதுக்கும் மற்றும் குற்றம் நிரூபிக்காமல் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டும் ஒன்றல்ல. நான் நீதிமன்றத்தை நியாயப்படுத்தவில்லை ஆனால் பாதி உண்மையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாதது," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் எதிர்த்தரப்பு வக்கீலை அணுகியபோது, சிறையில் சில மாதங்களுக்குப் பிறகு 122 பெரும் பெயிலில் வெளியில் இருந்தனர் என்பதை உறுதி செய்தார். பெயில் கிடைப்பதற்கு முன்பு அவர்கள் 9 மாதங்களே சிறையில் இருந்துள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் ஏழு பேர் இறந்துவிட்டனர் அவர்களுடைய வழக்கு ரத்து செய்யப்பட்டது மற்றும் நான்கு பேர் வேறு குற்றங்களுக்காகச் சிறையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இந்த இழுபறி வழக்கானது மார்ச் 6 இல் நிறைவுக்கு வந்தது. அவர்கள் குறித்த போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிபதி விடுவித்து உத்தரவை வெளியிட்டார். அவர்கள் அனைவரும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறவில்லை என்பதே உண்மை. சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன.

Similar News