ரூ. 2000 மேல் UPI செய்தால் GST வரி உண்டா? பரவி வரும் தகவலின் உண்மை பின்னணி?

Update: 2025-04-19 13:46 GMT

இந்தியாவில் தற்போது அனைத்து கடைகளிலும் GP போன்ற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தும் வசதி இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாயிரத்திற்கு மேல் நாம் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தினால் அதற்கு நாம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மை அல்ல வெறும் வதந்தி தான்.  டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தியில், 2,000 ரூபாய்க்கு அதிகமான தொகை கொண்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் GST விதிக்கப்படுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்னும் சில செய்திகளில் 5 சதவீதம் ஜிஎஸ்டி என்றும், டிஜிட்டல் வேலெட் சேவை பரிமாற்றத்திற்கு தான் ஜிஎஸ்டி வரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அரசு பல முறை UPI சேவை மீது வரி விதிப்பது குறித்து கருத்து எழுந்த போது அதை மறுத்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு முறை UPI மீது GST விதிக்கும் கருத்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது. யூபிஐ சேவை மூலம் மக்கள் கையில் பணப்புழக்கம் என்பது குறைந்து வருவதை பார்க்க முடிந்தாலும் பணமதிப்பிழப்புக்குப் பின்பு மக்கள் மத்தியில் பண புழக்கம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

UPI மீதான GSTதகவல் வெறும் வதந்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர், இதேபோல் மத்திய நிதியமைச்சகம் இதுகுறித்து  கூறும் பொழுது இது உண்மை அல்ல என்று இந்த செய்தியை மறுத்து இருக்கிறது.  

Input & Image Courtesy: News

Tags:    

Similar News