சர்வதேச பட்டினி குறியீடு 2023 உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா? ராமர் கோயிலை வைத்து ஒப்பீடு செய்யும் ஊடகங்கள்!
Global Hunger Index (2023) (GHI) என்று சொல்லப்படும் சர்வதேச பட்டினி குறியீட்டில் (2023) இந்தியா 111வது இடத்தை பிடித்து இருப்பதாகவும் ஆனால் இராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதாகவும் தனியார் ஊடகத்தின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
உண்மை என்ன?
சர்வதேச பட்டினி குறியீட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது நாம் அலசிய போது நம் மத்திய அரசு இந்த தரக்குறியீட்டின் நம்பகத்தன்மையை கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலம் முதலே எழுப்பி வந்ததாகக் தெரிய வருகிறது. மேலும், இந்த தரக்குறியீடு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்வதேச பட்டினி குறியீடு தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் பதில் அளித்து இருந்தார். அந்த குறியீடு தவறானது எனவும் சரியான அளவீடுகள் படி எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
மேலும், பட்டினி குறியீடாக நேரடியாக எடுக்கப்படும் நான்கு காரணிகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை மட்டுமே பட்டினிக்கான நேரடி காரணியாக எடுத்துக் கொள்ள இயலும் எனவும் மற்றவற்றை பட்டினிக்கான நேரடி காரணியாக எடுத்துக் கொள்வது சரியானது அல்ல எனவும் தெரிவித்து இருந்தார்.
இது ஒருபுறமிருக்க குழந்தைகள் இறப்பு விகிதம் பட்டினி காரணமாக ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளது ஏற்புடையதாக இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் படி 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு சதவீதம் குறைந்து வருவதை தான் அறிய முடிகிறது.
Stunting :
NFHS - 4 ( 2015 - 2016 ) : 38.4%
NFHS - 5 ( 2019 - 2019 ) : 35.5%
Wasting :
NFHS - 4 ( 2015 - 2016 ) : 21.0%