மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.. 210 கிலோ தங்கத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை.. உண்மை என்ன?

Update: 2024-08-10 02:41 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்க சிலை நிறுவப்பட்டது என்று கூறி பகிரப்படும் தகவல் முழுமையாக உண்மையா? என்பது குறித்து தற்போது பார்க்கலாம். உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் விளங்கி வருகிறது. குறிப்பாக மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் அறியாதவர்களே இல்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் 210 கிலோ அளவில் தங்க சிலையில் அம்மன் விக்ரகம் பதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


ஏற்கனவே அம்மன் விக்ரம் கோவிலில் அமைந்து இருக்கிறது. இது போக 210 கிலோ அளவில் தங்கத்தினால் அம்மன் சிலை பிரதிஷ்ட செய்யப்பட்டதாக ஒரு தகவல் மற்றும் போட்டோவுடன் சேர்த்து வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஒரு தகவல் பொய் என்றும், தெரியாமல் மக்கள் இந்த ஒரு தகவலை சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வருவதாகவும் முடிவில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக ஒரு நகைக்கடையில் தான் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதாகவும், அதுவும் தத்ரூபமாக மீனாட்சி அம்மன் சிலை போலவே வடிவமைப்பு செய்யப்பட்டு 210 கிலோ எடையில் அம்மன் சிலை உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News