என்னாது 28000 கோடி ரூபாய் கடன் கொடுத்தீங்களா? உதயநிதி பேசியது இருக்கட்டும்: உண்மை இதுதானாம்!

Update: 2023-12-28 01:17 GMT

சென்னை கோட்டூரபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த டிசம்பர் 23 ல் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.

கடந்த ஆண்டு மட்டும் 28,000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதைவிட சற்று அதிகமாக 30,000 கோடி ரூபாய் கடன் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்ல இந்த அரசு எப்பொழுதும் துணையாக இருக்கும் என பேசினார். 

உண்மை என்ன?

கடன் வழங்குவதற்கான நிதி ஆதாரங்கள் DAY-NULM மற்றும் NABARD, TAHDCO மூலம் கிடைக்கிறது. DAY-NULM கீழ் தமிழகத்திற்கு (2022-2023) ஒதுக்கப்பட்ட நிதி 38157 கோடி ரூபாயாகும். NABARD மூலம் வழங்கப்பட்ட மொத்த கடன் 13403கோடி ரூபாய். இதில் 600 கோடி ரூபாய் மட்டும் தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக தெரிகிறது. 



Similar News