நாடு கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதனை ஒரு வைரல் செய்தியாக, தெலங்கானாவில் ஊரடங்கு மே 29 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக 4TV மற்றும் நியூஸ் 24 யில் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோ தவறான செய்தியைப் பரப்பி வருகின்றது. இதுபோன்ற ஒரு அறிவிப்பை தற்போது தெலுங்கானா அரசாங்கம் வெளியிடவில்லை.
முதலில் நியூஸ்மீட்டர் இது குறித்து 4TV மற்றும் நியூஸ் 24 யின் யூடூப்பில் சோதனை செய்தபோது இது சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோ இல்லை என்று கண்டறியப்பட்டது. இந்த வீடியோ கடந்த ஆண்டு ஊரடங்கு விதிக்கப்பட்டபோது மே 2020 இல் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 இல் மே 17 வரை ஊரடங்கு விதிக்க அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும் தெலங்கானாவில் தொடர்ந்து கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 29 2020 வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டது. எனவே அப்பொழுது அந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டது.
இரண்டுவதாக இதுபோன்று ஊரடங்கு நீடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என்று செய்தி அறிக்கைகளில் சோதனை செய்த போது அது போன்று ஒரு அறிக்கை வெளியிடப்படவில்லை. தற்போது வரை தெலங்கானாவில் 12 மே 2021 இல் 22 மே 2021 வரை வரைக்குமே ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீட்டிப்பது குறித்து எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை.
எனவே தற்போது வைரலாகி வரும் வீடியோ தவறானது ஆகும். இது கடந்து ஆண்டு மே 2020 இல் எடுக்கப்பட்டது. இதுபோன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை உடனடியாக நம்பாமல் மக்கள் அதனை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் சென்று சரி பார்க்கவேண்டும்.
Source: https://newsmeter.in/fact-check/lockdown-has-not-been-extended-in-telangana-viral-videos-are-old-678205