சந்திரயான்-3 திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்தவர் இட்லி விற்கிறாரா? தமிழ் ஊடகங்களின் அவசர புத்தி!

Update: 2023-09-20 23:59 GMT

இட்லி விற்கும் ‘சந்திரயான் 3′ திட்ட பொறியாளர்! இஸ்ரோவின் ‘சந்திரயான் 3′ திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த ஜார்க்கண்ட்டை சேர்ந்த பொறியாளர் தீபக் குமார், 18 மாதங்கள் ஊதியம் வழங்காததால், செலவை சமாளிக்க இட்லி வியாபாரம் செய்து வருகிறார். பகலில் அலுவலகம் செல்லும் இவர் காலை, மாலை என இரு வேளைகளிலும் இட்லி விற்று வருகிறார்; இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ.300 – ரூ.400 வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார் என சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 



இது தொடர்பாக பிபிசி ஹிந்தி தளத்தில் வெளியான ஒரு கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து ‘PIB Fact check’ (Press Information Bureau) தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி விளக்கம் அளித்துள்ளது. 

பிபிசி இந்திக்குப் பேட்டி அளித்தவர் HEC என்ற நிறுவன பணியாளர். அவரை சந்திரயான்-3க்கான ஏவுதளம் வடிவமைத்தவர் எனத் தவறாகப் பொருள் கொள்ளும் வகையில் தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. சந்திரயான்-3 ஏவுதளம் வடிவமைத்தவருக்கு 18 மாதம் சம்பளம் வழங்கப்பட வில்லை என்பது தவறான தகவல். அவர் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனின் (HEC) ஊழியர். அந்நிறுவனம் சந்திரயான்-3க்கான எந்த பாகங்களையும் வழங்கவில்லை


 

 





Similar News