பா.ஜ.க 30 இடங்களில் 500-வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதா? பின்னணி உண்மை என்ன?
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 30 இடங்களை 500-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றதாகவும், 100க்கும் மேற்பட்ட இடங்களை 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றதாகவும் சில சமூக ஊடகப் பயனர் ஒருவர் கூறி உள்ளார். லோக் சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சமூக ஊடக பயனர்கள் தவறான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
குறிப்பாக இந்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடும் போது, "பா.ஜ.க 500 வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 30 இடங்களை வென்றது" என்றும், "1,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் 100 இடங்களுக்கு மேல்" என்றும் கூறினர். ஆனால் ECI-இன் இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, 2024 இந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் எவரும் "500 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகள்" அல்லது "1,000 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகள்" வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை.
குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் படி, ஒடிசாவின் ஜாஜ்பூரில் பா.ஜ.க-வுக்கு மிகக் குறைந்த வெற்றி வித்தியாசம் கிடைத்தது ரவீந்திர நாராயண் பெஹரா மக்களவைத் தொகுதியில் 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெஹெரா 5,34,239 வாக்குகளைப் பெற்று, 5,32,652 வாக்குகளைப் பெற்ற பிஜு ஜனதா தளத்தின் (BJD) சர்மிஸ்தா சேத்தியைத் தோற்கடித்தார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ரூரலில் பா.ஜ.க வேட்பாளர் ராவ் ராஜேந்திர சிங் 1,615 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராவ் ராஜேந்திர சிங் 617,877 வாக்குகள் பெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் அசோக் சோப்ரா 616,262 வாக்குகளைப் பெற்றார்.
Input & Image courtesy: ABPLive News