எச்சரிக்கை .! 4 ஆம் கட்ட கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குகிறதா ?

Update: 2021-06-05 05:41 GMT

சமூக வலைத்தளத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து பல்வேறு போலி செய்திகளும் பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தற்போது அதே போன்று ஒரு வைரல் செய்தியாக அரசாங்கம் நான்காம் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்குவதாக ஒரு செய்தி வாட்ஸ் ஆப்பில் பரப்பப்பட்டு வருகின்றது.


அந்த வைரல் செய்தியில், "கோவிட்-19 அரசாங்க நிவாரண நிதி. நிவாரண நிதிக்குப் பதிவு செய்யுங்கள்," என்று அந்த செய்தியின் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதற்கான வாய்ப்பை தவறவிடாமல் பதிவு செய்யுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் குழுவான PIB வெள்ளிக்கிழமை அன்று இந்த வைரல் செய்தியை மறுத்து ஒரு ட்விட்டை வெளியிட்டது. இதுபோன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டது. மேலும் இதுபோன்ற மோசடி வலைத்தளங்களில் எந்த தகவலையும் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.


எனவே அரசாங்கம் கொரோனா தொற்றின் நான்காம் கட்ட நிவாரண நிதி வழங்குவதாக வைரலாகும் செய்தி தவறானது ஆகும். இந்த கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

Source: ஹிந்துஸ்தான் டைம்ஸ் 

Similar News