ஒரு ஓட்டு வாங்கிய தி.மு.க சார்பு 'இரணியல்' 4'ம் வார்டு வேட்பாளர், "அவர் தி.மு.க இல்லை" என்ற விவாதம் - உண்மை என்ன? #Fackcheck

Update: 2022-02-24 07:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் 4'வது வார்டில் தி.மு.க வேட்பாளர் எனக் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் ரா.முருகன் ஒரு ஓட்டு வாங்கியதால் அதை வெளியில் சொல்ல தைரியம் இல்லாது சமாளிக்கும் விதமாக நேற்று முதல் தி.மு.க சார்பு இணையவாசிகள் "அவர் தி.மு.க இல்லீங்கோ" என்கிற ரீதியில் போராடி வருகின்றனர். அது தொடர்பாக தகவல்களை திரட்டியபோது கிடைத்த விஷயங்களை இங்கே பதிவிடுகிறோம்.


நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களின் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களை ஆளும் தி.மு.க அரசு 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து கைப்பற்றியது. குறிப்பாக பல இடங்களில் வாக்குக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவை கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டன. மேலும் சில இடங்களில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் கடந்த ஒரு வாரமாக பல செய்தித்தாள் மற்றும் இணையதளங்களில் தகவல்களாகவும், செய்திகளாகவும் வெளியானது. ஆனாலும் நாங்கள் தான் மெஜாரிட்டியாக ஜெயித்து உள்ளோம் என இப்பொழுது வரை தி.மு.க விளம்பரப்படுத்தி வருகிறது வழக்கம்போல்.


இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நான்காவது வார்டில் முருகன் என்கின்ற வேட்பாளர் தி.மு.க கட்சியின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு போட்டியிட்டார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஒரு வாக்கு மட்டுமே பெற்றார், ஆனால் அதே வார்டில் தி.மு.க'வின் கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் ரெத்தின பாய் என்ற வேட்பாளரை நிறுத்தியது. ஆனால் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு அங்கே வேட்புமனு தாக்கல் செய்தாலும் இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ திருமதி.கிரிஜா என்கின்ற பா.ஜ.க வேட்பாளர்தான்.


இந்நிலையில் இறுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது அங்கு தி.மு.க வேட்பாளர் என வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்ட ரா.முருகன் என்பவர் ஒரு வாக்கு மட்டுமே வாங்கினார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் ஒரு ஓட்டு வாங்கிய தி.மு.க பெருமளவில் செய்திகள் வெளியாகின. உடனே இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க சார்பு இணையதள வாசிகள் அந்த வார்டில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிட்டது தி.மு.க போட்டியிடவில்லை என்பது போல் நேற்றுமுதல் இணையத்தில் உருண்டு வருகின்றனர்.




குறிப்பாக தி.மு.க எது செய்தாலும் அது நன்மைக்கே என கண்மூடித்தனமாக நம்புபவர்களும், தமிழக மக்கள் மூச்சுவிட்டு வாழ்வதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான் என பொய் பரப்புரை செய்து வருபவர்களும்தான் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் "தி.மு.க ஒரு ஓட்டு வாங்கவில்லைங்கோ, தி.மு.க ஒரு ஓட்டு வாங்கவில்லைங்கோ" என சமூக வலைதளங்களில் நேற்று முதல் கதறி வருகின்றனர்.




இந்நிலையில் கதிர் செய்திகள் சார்பாக நேற்று அந்த ரா.முருகன் என்கின்ற தி.மு.க வேட்பாளருக்கு தொலைபேசியில் அழைத்து கேட்டபோது அவர் கூறியதாவது, "நான் தி.மு.க'தான்ங்க உள்ளாட்சி தேர்தல்ல தி.மு.க கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தேன் ஆனால் கூட்டணி கட்சி போட்டியிடுது அதனால நீ எதுவும் செய்யக்கூடாது என்று கேட்டாங்க அதனால நான் எதுவும் செய்யாமல் கம்முனு இருந்துட்டேங்க" என்று கூறினார்.


ஆனால் அவரது வேட்புமனுவில் தி.மு.க சார்பாக போட்டியிடுகிறார் என பதிவாகியுள்ளது உண்மை. இதனை வெளியில் சொல்ல தைரியமில்லாத தி.மு.க'வினர் அவர் எங்களது கட்சியை இல்லை என இத்தனை வருடமாக கட்சிக்கு உழைத்தவரை ஒதுக்கி விட்டார்கள். 

Similar News