மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேர் இலவசமாக தரப்படுகிறதா?
“40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்டட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. தேவை இருக்கிறவங்க நேர்ல போய்… வருமான சான்றிதழ், ரேஷன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள அட்டை குடுத்து வாங்கிக்கலாம்” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
உண்மை என்ன?
மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை அரசு இலவசமாக தருவதாக வைரலாகும் தகவல் 2019 ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
NIEPMD – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பார்த்த போது தெளிவான விளக்கம் கிடைத்தது.
அதில் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று நிப்மெட் மறுப்பு தெரிவித்திருப்பதை காண முடிந்தது.