டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல்: ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் அதிகமாக ரூ.40 வசூல் உண்மையா?

பாட்டில் உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர்ந்து, அதிக செலவுகள் மற்றும் மோசடி கொள்முதல் மூலம் ₹1,000 கோடி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்த அமலாக்க இயக்குநரகத்தின் (ED) குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து டாஸ்மாக் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வந்தாலும், டாஸ்மாக் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட ₹10 முதல் ₹40 வரை கூடுதலாகக் கோருகின்றனர். ஆனால் இதற்கு முன்பு வரை பத்து ரூபாய் அதிகமாக ஒரு பாட்டிலுக்கு விற்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த விலையை மூன்று மடங்காக உயர்த்தி ரூபாய் 40 ரூபாய் அதிகமாக ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு கலைச்செல்வன் என்ற நபர் மதுபானம் வாங்கச் சென்றார்.
அவர் வாங்கியதற்கான ரசீதைக் கேட்டு, கூடுதலாக ₹10 வசூலித்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, கடைக்காரர் மிரட்டும் விதத்தில் பதிலளித்தார், , “ பாட்டிலின் விலை ₹200, ஆனால் ₹240 செலுத்த வேண்டுமா? முன்பு ஒரு பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலித்தவர்கள் இப்போது ₹40 அதிகமாகக் கேட்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ஒரு பாட்டிலுக்கு ரூ.40 என கூடுதல் வசூல் கணக்கிடப்பட்டால், அதிலிருந்து மட்டும் எத்தனை கோடி கூடுதல் தொகை கிடைக்கும்? ஒரு மாதத்தில் எத்தனை கோடி வருவாய் கிடைக்கும்? ஒரு வருடத்தில்? இந்தத் தொகை யாருக்குச் செல்கிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
Input & Image Courtesy:News