கொரோனா நிதி திட்டத்தின் கீழ் ₹4,000 மத்திய அரசு வழங்குகிறதா - வைரல் செய்தி உண்மையா?
சமூக ஊடகத்தில் தற்போது ஒரு வைரல் செய்தியாக கொரோனா நிதியின் கீழ் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் ₹4,000 மத்திய அரசாங்கம் வழங்குவதாக ஒரு செய்தி வலம் வருகின்றது.
மேலும் இந்த வைரல் செய்தியில் கொரோனா நிதி திட்டத்தின் கீழ் அனைவர்க்கும் 4000 வழங்கப்படுகின்றது, இதில் பதிவு செய்து உடனடியாக பணத்தைப் பெறுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் இதுபோன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிடவில்லை மற்றும் இந்த வைரல் செய்தி போலியானது ஆகும்.
இந்த வைரல் குற்றச்சாட்டுப் போலியானது என்று PIB தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. "வாட்ஸ்ஆப்பில், இந்திய அரசாங்கம் குடிமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் கீழ் 4000 ரூபாய் வழங்குவதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இது போலியானது ஆகும். இதுபோன்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தவில்லை," என்று உண்மை கண்டறியும் குழுவான PIB தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்த வைரல் செய்தியானது மத்திய அரசாங்கம் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்க ₹6.29 லட்சம் கோடி ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளித்த பின்பு வெளி வந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து இதுபோன்று பல்வேறு போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டே இருக்கின்றது. இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று பலமுறை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.