ஒரு எலி பிடிக்க ரயில்வே துறை செலவு செய்தது 41 ஆயிரம் ரூபாயா? பரவி வரும் தகவல்: உண்மை என்ன?

Update: 2023-09-19 00:45 GMT

மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் கவுர். சமூக ஆர்வலரான இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி, அம்பாலா, மொராதாபாத், லக்னோ மற்றும் ஃபெரோஸ்பூர் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளைக் கொண்ட வடக்கு ரயில்வேயில் எலிகளைப் பிடிப்பதற்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு எனக்கேட்டு மனு செய்திருந்தார்.

இதில் லக்னோ கோட்டத்தில் எலிகளைப் பிடித்ததற்கு யார் பொறுப்பு என்ற கவுரின் கேள்விக்கு, லக்னோவைச் சேர்ந்த சென்ட்ரல் கிடங்கு கார்ப்பரேஷனுக்கு எலிகளைப் பிடிக்க 2019 முதல் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு எலியையும் பிடிக்க ரூ.41,000 ரயில்வே செலவிடுகிறது என பதில் சொன்னதாக ஒரு தகவல் பரவி வருகிறது.  

இது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. கரப்பான் பூச்சிகள், கொறித்துண்ணிகள், பூச்சிகள், கொசுக்களை கட்டுப்படுத்த சராசரியாக ஆண்டுக்கு 25,000 பெட்டிகள், அதாவது ஆண்டுக்கு சுமார் ₹ 94 அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே செலவாகிறது. ஒரு எலியை பிடிக்க 41 ஆயிரம் செலவானதாக வெளியான தகவல் பொய் என கூறியுள்ளது. 


Similar News