பாஜக தடையா? 6000 ரூபாய் மழை நிவாரண விவகாரத்தில் திமுக தரப்பு பரப்பி வரும் தகவல்!

Update: 2023-12-13 01:57 GMT

வெள்ள நிவாரண நிதியான 6000 ரூபாயை மக்களுக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி நியூஸ் தமிழ் 24×7  ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் திமுக ஆதரவாளர்களால் பகிரப்படுகிறது. 


உண்மை என்ன?

சென்னையை சேர்ந்த ராமதாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்படும். நியாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. நிவாரண நிதியையும் வங்கி கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது" என கூறியிருந்தார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல, திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.




Similar News