இஸ்ரேல் குண்டு வெடிப்பில் 650 யூதர்கள் கொலை - வைரலாகும் பழைய வீடியோ.!

Update: 2021-05-14 06:06 GMT

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்கு இடையே உள்ள போர் அதிகரித்துள்ளது, இதனால் குண்டு வீச்சில் இறங்கியதால், இரண்டு பக்கமும் பல உயிர்கள் இறந்துள்ளன. இதற்கிடையில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் தற்போது சமீபத்தில் இஸ்ரேலில் நடந்த குண்டுவெடிப்பில் 650யூதர்கள் கொலை என்று கூறி பெரிய தீ விபத்து மற்றும் கார் எரிவது போன்றவை குற்றம்சாட்டப்பட்டு வைரலாகி வருகின்றது.


பல பேஸ்புக் பயனாளர்கள் இதனை இஸ்ரேலில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ தவறானது என்று இந்தியா டுடே உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடுமையான மோதல்கள் இருந்தாலும் இதுபோன்ற பெரியளவில் குண்டு வெடிப்பு எதுவும் இஸ்ரேலில் பதிவு செய்யப்படவில்லை. இந்த வீடியோ உண்மையில், கடந்த ஆண்டு எகிப்தில் எண்ணெய் குழாய் வெடித்துக் கிட்டத்தட்டப் பேரளவில் கார்கள் சேதமடைந்து பலரைக் காயமடையச் செய்தது.

Full View

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ கடந்த ஆண்டு ஜூலை 2020 இல் உலகில் பல செய்தி அறிக்கையில் பல காணப்பட்டது. அந்த சம்பவத்தில் எண்ணெய் குழாய் வெடித்ததால் 20 கார்கள் வெடித்தது மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.


எனவே தற்போது வைரலாகி வரும் வீடியோ தற்போதைய இஸ்ரேல் குண்டு வெடிப்பில் எடுக்கப்பட்டது அல்ல, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்கு இடையில் மோதல்கள் இருந்தாலும் அதனுடன் தொடர்புடையது அல்ல. இது உண்மையில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ. மேலும் தற்போதைய போர் மோதல்களில் 650 யூதர்கள் கொல்லப்பட்டதற்கான எந்த செய்தி அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை.

source: https://www.indiatoday.in/fact-check/story/fact-check-oil-pipeline-blast-in-egypt-passed-off-as-explosion-in-israel-targetting-jews-1802330-2021-05-13

Similar News