இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டதா? பரவி வரும் தகவலின் உண்மைதன்மை இதோ!

Update: 2021-11-17 01:15 GMT

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.



மேலே உள்ள புகைப்படத்தை பற்றி தேடிப்பார்த்தபோது, அது வியட்நாம் நாட்டில் உள்ள Cát Tiên archaeological site என்ற இடத்தில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அங்கே கடந்த 4 முதல் 9ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்து குடியேறிய மக்களால் நிறைய சிவ லிங்கம் கொண்ட கோயில்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. கடந்த 1985ம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.



இதன் மூலம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை என்பது தெரிய வருகிறது. இதனை உண்மை செய்திகளை கண்டறியும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தளமான factcrescendoஉறுதிபடுத்தியுள்ளது.



 








 






Similar News