ஜூன் 8 முதல் மால், வழிபாட்டுத் தளங்கள் திறக்க அனுமதியா? வைரல் வீடியோ பின்னணி என்ன?
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்துப் பல போலி செய்திகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது அதே போன்று ஒரு வைரல் வீடியோவாக, உத்தர பிரதேசத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி ஊரடங்கு தளர்வுகள் குறித்துத் தெரிவிப்பது போன்று ஒரு வீடியோ வாட்ஸ்ஆப்பில் பரப்பப்பட்டு வருகின்றது.
அந்த வீடியோவில் அவர், ஜூன் 8 முதல் மால், உணவகங்கள், மத நிலையங்கள் மற்றும் விடுதிகள் திறக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் மூன்று ஷிபிட் ஆகா வேலை செய்யலாம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ தவறான செய்தியை முன்வைக்கிறது. அந்த வீடியோவின் ஓரத்தில் மே 31 குறிப்பிட்டிருந்த நியூஸ்மீட்டர் கண்டறிந்தது. எனவே இது சமீபத்திய வீடியோவாக இருக்காது, மேலும் அது ABP சேனலின் தற்போதைய பின்புறம் போன்றும் அது தோற்றமளிக்க வில்லை.
மேலும் இது குறித்து யூடூபில் சோதனை செய்த போது, இது 11 மாதங்களுக்கு முன்பு ABP நியூஸ் சேனல் பதிவு செய்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய செய்தி அறிக்கைப் படி, உத்தர பிரதேசத்தில் மே 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து அடுத்த 24 மணி நேரத்திலேயே முடிவு எடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரல் செய்தி கடந்த ஆண்டு பல்வேறு செய்தி வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. எனவே தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ தவறானது மற்றும் பழைய வீடியோ ஆகும்.
Source: News Meter