வாடிக்கையாளர்களுக்கு வரும் போலி செய்தி - BSNL நிறுவனம் எச்சரிக்கை!

Update: 2021-07-08 02:08 GMT

சமீபகாலமாக BSNLசிம் வைத்துள்ள பொதுமக்களுக்கு மோசடி செய்யும் நோக்கில், சில செய்திகள் வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்து அந்நிறுவனம் மக்களை எச்சரித்துள்ளது.

போலியாக வரும் செய்தி...! 

பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கீழ்க்காணுமாறு போலியான செய்திகளைப் பெறுகின்றனர். "உங்களது சிம் ஆவணத்தை சரி பார்க்கும் பணி நிலுவையில் உள்ளது. 8xxxxxxxxx-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது சேவை 24 மணி நேரத்திற்குள் முடக்கப்படும். நன்றி ஆர்கேஜி".

மேற்கண்டவாறு மெசேஜ் வந்திருக்கலாம். அல்லது  பின்வருமாறு வரலாம்.

போலியாக வரும் செய்தி...! 

"அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்களது பிஎஸ்என்எல் சிம் அட்டை கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உங்களது சிம் அட்டை 24 மணி நேரத்திற்குள் முடக்கப்படும். 9xxxxxxxxx என்ற எங்களது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி."

இதுபோன்ற செய்திகளுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது போன்ற செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் அனுப்புகிறது என்பதை நம்ப வைப்பதற்காக இந்த வகையான போலியான செய்திகள் அனுப்பப்படுகின்றன. இது போன்ற செய்திகளை புறக்கணிக்குமாறும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் சார்ந்த எந்தவிதமான கேஒய்சி தரவுகளையும் பகிர வேண்டாம் என்றும் பிஎஸ்என்எல் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

Similar News