போலியான CoWIN இணையதளம்.. நடந்தேறிய ஆள்மாறாட்டம்.. மத்திய அரசு எச்சரிக்கை..

Update: 2024-06-02 14:01 GMT

சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் போலிகளின் நடமாட்டம் அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக போலியான வெப்சைடுகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு மக்கள் அதில் அதிகமாக தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். மேலும் போலியான வெப்சைட்டில் பதிவிடப்படும் தகவல்களும் மக்களை சென்று அடைகிறது. இந்த தகவல்கள் முற்றிலும் ஆள்மாறட்டும் செய்யப்பட்டு நடந்திருக்கிறது. இத்தகைய இணையதளத்தில் தரப் படும் தகவல்களை மக்கள் யாரும் முழுமையாக நம்ப வேண்டாம் அதில் வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான் என்று மத்திய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


இதில் demo.co-vin.in என்ற இணையதளம் அதிகாரப்பூர்வ CoWIN தளமாக ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு இருக்கிறது. மேற்கூறிய இந்த ஒரு இணையதளம் போலியானது மற்றும் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது. மத்திய அரசின் சார்பில் செய்யப்பட்ட ஊடகப் பொய்களில் இந்த ஒரு இணையதளம் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.


இது தொடர்பாக மத்திய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கும் பொழுது, "PIB FactCheck துல்லியமான தகவலுக்கு, அதிகாரப்பூர்வ CoWIN இணையதளத்தைப் பார்வையிடவும், https:// cowin.gov.in என்று இணைதளமே மிகவும் சரியான இணைத்தளம் மற்ற இணையதளத்தை பொதுமக்கள் பார்வையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள் & பகிர்வதைத் தவிர்க்கவும் சந்தேகத்திற்கிடமான இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களை யாரும் வழங்க வேண்டாம்" என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News