மதுரையில் பா.ஜ.க வாக்குச்சாவடி முகவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக சமூகவலைதளங்களில் பா.ஜ.க மீது தவறான தகவல் பரவி வருகிறது, தி.மு.க'வினர் கள்ள ஓட்டு போட முயன்றதை தடுத்ததன் பலனாகவே இந்த புகார் எழுந்துள்ளதாக பா.ஜ.க வாக்குச்சாவடி முகவர் கிரிநந்தன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரையில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்ணை ஹிஜாபை அகற்றுமாறு தகராறில் ஈடுபட்டதாக கிரிநந்தன் என்ற பா.ஜ.க முகவரி மீது தி.மு.க அரசு 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கிரிநந்தன் விளக்கமளித்த வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது அதில் அவர் கூறியதாவது, "அல்-அமீன் பள்ளியில் பா.ஜ.க'வின் 7'வது வார்டு, 8'வது வார்டு வேட்பாளர் மற்றும் முகவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து வந்தனர், அதிலும் குறிப்பாக 8வது வார்டில் பா.ஜ.க வேட்பாளரையும் அனுமதிக்கவில்லை பா.ஜ.க'வின் வாக்குச்சாவடி முகவராகிய என்னையும் அனுமதிக்கவில்லை' என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "தி.மு.க'வின் 8வது வார்டு வேட்பாளர் முகமது யாசின் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 30 பேர் கும்பலாக வந்து தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடியை ஆக்கிரமித்தனர், இதை எதிர்த்து கேட்ட மற்றவர்களை திட்டவும் ஆரம்பித்தனர் காரணம் என்னவென்றால் தி.மு.க கள்ள ஓட்டு போட முயன்றதாகவும் அதனால் வாக்களிக்க வருபவர்களை கள்ள ஓட்டை தடுப்பதற்காக யார் ஓட்டுப்போட வருகிறீர்கள் முகத்தை காண்பித்து விட்டு ஓட்டுப் போடுங்கள் என்று நாங்கள் கேட்டபோது நீங்க இதெல்லாம் கேக்கறீங்க நீங்க இதெல்லாம் கேட்க கூடாது என்ன கிரிதரன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் தி.மு.க'வினர்.
மேலும் அந்த தி.மு.க வேட்பாளரின் 30 பேர் கொண்ட ஆதரவாளர் கும்பல் என்னை தாக்க வந்தது இப்படி வாக்குச் சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயன்ற தடுத்து கேட்ட என்னை பழி சுமத்தி வெளியேற்றினர் நான் கள்ள ஓட்டு போட்டதை தடுத்து கேட்ட காரணத்தினாலேயே ஹிஜாபை கழட்ட சொன்னதாக என் மீது அபாண்டமாக பழி சுமத்தி அவர்கள் என்னை வெளியேற்றினர் என்னை மட்டும் அவர்கள் வெளியிடவில்லை இதுபோல் கேள்வி அந்த பூத் வாக்குச்சாவடியில் கேள்வி கேட்ட என்னுடன் வந்த பெண்களையும் வெளியேறயுள்ளனர், உன்னை வெட்டி விடுவேன் எனக் கூறி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபோன்ற வாக்குச்சாவடி கைப்பற்றும் செயலை தி.மு.க அனைத்து இடங்களிலும் செய்தது.
இதுபோல் வாக்குச் சாவடியை கைப்பற்றி வாக்குகளை தனக்கு சாதகமாக தி.மு.க பதிந்துள்ளது" என பா.ஜ.க'வின் வாக்குச்சாவடி முகவர் கிரிதரன் பேசும் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் பா.ஜ.க'வின் வாக்குச்சாவடி முகவர் ஹிஜாபை அகற்ற வேண்டுமென்றே தகராறு செய்ததாக தி.மு.க'வினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.