தமிழ்நாட்டில் HP லேப்டாப் தயாரிக்கும் ஆலை.. மத்திய அரசின் முயற்சிக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறதா திராவிட மாடல்?

Update: 2024-09-10 14:28 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எச்.பி தன்னுடைய ஆலையை இங்கு திறக்க இருக்கிறது. அமெரிக்காவின் ஹெச்பி இன்க் மற்றும் டிக்சன் டெக்னாலஜிஸ்-ன் கிளை நிறுவனமான Padget Electronics ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் HP லேப்டாப்கள், பர்சனல் கம்பியூட்டர்கள் மற்றும் ஆல் இன் ஓன் சிஸ்டம்ஸ் ஆகியவற்றைத் தயாரிக்கும் உற்பத்தி ஆலையை அமைக்கத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளன.


மேலும் இந்த ஒரு நிறுவனம் தமிழகத்தில் ஆலை அமைப்பதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறது அது மட்டும் கிடையாது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். "மேக் இன் இந்தியா" முயற்சியின் கீழ் உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் வாயிலாக இந்த கூட்டணி தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.


இது தொடர்பாக மத்திய அமைச்சர் குறிப்பிடும் பொழுது, "HP மற்றும் Padget Electronics ஆகியவை தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து HP லேப்டாப்கள், பர்சனல் கம்பியூட்டர்கள் மற்றும் ஆல் இன் ஓன் சிஸ்டம்ஸ் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதை பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சியடைகிறேன். இது பிரதமர் நரேந்திர மோடி-யினஅ மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் PLI திட்டத்தின் வெற்றியாகும்" என்று வைஷ்ணவ் கூறினார். ஆனால் இதை தன்னுடைய முயற்சியின் பெயரில் திமுக அரசாங்கம் தமிழகத்தில் கொண்டு வந்ததாக செய்திகளை வெளியிட்டு மத்திய அரசின் முயற்சி திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள்.

Input & Image courtesy:The commune News

Tags:    

Similar News