உத்தரகாண்ட் முதல்வரைப் பாராட்டி NSA கடிதம் எழுதியது உண்மையா?

Update: 2021-04-23 04:12 GMT

சமீபத்தில் ஹரித்துவாரில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியின் போது நிலைமையைக் கையாண்டது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் ஓம் பிரகாஷை பாராட்டி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்(NSA) அஜித் தோவல் எழுதிய கடிதம் போன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.


இது குறித்து நியூஸ்மீட்டர் வைரல் கடிதம் போலியானது என்பதைக் கண்டறிந்துள்ளது. இதில் அநேக பிழைக்கள் காணப்பட்டன. இந்த கடிதத்தில் பொதுவாக கடைப்பிடிக்கும் இலக்கண நடைமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கவில்லை. இதன்முலம் இந்த வைரல் கடிதம் போலியானது என்றும் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதத்தில் இதுபோன்ற பிழைகள் எதுவும் இருக்காது.



இந்த கடிதத்தில் உள்ள தலைப்பை வைத்து இணையத்தில் தேடியபோது, இந்த கடிதத்தில் உள்ள உள்ளடக்கத்துடன் ஒரு கடிதத்தை 2019 இல் பத்திரிகையாளர் அமன் சர்மா பதிவிட்டுள்ளார். அந்த கடிதமானது உத்தரப் பிரதேச அரசாங்கம் மற்றும் செயலாளர் ராஜேந்திர குமார் அயோத்தியா வழக்கைக் கையாண்டது குறித்துப் பாராட்டி எழுதப்பட்டிருந்தது.

இதுதவிர 2020 இல் லடாக் எல்லை பிரச்சனையைக் கையாண்டதைப் பாராட்டியதாக ஒரு கடிதம் வைரலாகி வந்தது. இதே உள்ளடக்கத்துடன் அந்த கடிதம் வலம்வந்தது. இருப்பினும் அதைப் போலியானது என்று PIB தெரிவித்தது.


எனவே ஆதாரப்பூர்வமாக, உத்தரகாண்ட் முதல்வரைப் பாராட்டி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடிதம் எழுதியதாக வைரலாகி வருவது போலியானது என்பதை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு கடிதம் எழுதப்படவில்லை.

source: https://newsmeter.in/fact-check/sorry-nsa-did-not-praise-uttarakhand-cs-for-handling-kumbh-mela-677250

Similar News