முட்டையை தூக்கி காட்டும் உதயநிதி: PG நீட் தேர்வு, UG நீட் தேர்வு வித்தியாசம் புரியாத திமுகவினர்!

Update: 2023-10-28 01:50 GMT

PG நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலும் மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த தேர்வு டாக்டர் படிப்புக்கான எம்பிபிஎஸ் முடித்து, மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கானது. 

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு முட்டையை தூக்கி மக்களிடம் காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்துள்ளார். ஏதாவது ஒரு குழந்தை நீட் தேர்வுக்கு எதிராக இருக்கிறதா? யாருமே நீட் தேர்வுக்கு எதிராக கிடையாது. 2016ல் இருந்து இதனை வைத்து தி.மு.க அரசியல் செய்து வருகிறது.

ஒரு முட்டை கொண்டு வந்து, நீட்டுக்கான ரகசியம் என உதயநிதி சொல்கிறார். தமிழக மக்கள் நீட்டை ஏற்று கொண்டார்கள். உதயநிதி போன்றனவர்கள் அவர்களும் படிக்கவில்லை. குழந்தைகளும் படிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். மக்களை படிக்க விடக் கூடாது என்று நினைப்பதால் தான் தமிழகம் கல்வியில் பின்தங்கி உள்ளது என கூறியுள்ளார். 

PG நீட் தேர்வு, UG நீட் தேர்வு வித்தியாசம் புரியாத திமுகவினர் PG நீட் தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை UG தேர்வில் கொண்டு வந்ததாக நினைத்து விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு அந்த துறையை சேர்ந்த பேராசிரியர்கள் என்ன விளக்கம் கொடுத்துள்ளனர் என்பதை நீங்களே பாருங்க. 


Full View


Similar News