கொரோனாவால் இறந்த குடும்பத்துக்கு SDRF கீழ் 4 லட்சம் இழப்பீடா...வைரல் செய்தி உண்மையா?
இந்த கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டே இருக்கின்றது. தற்போது ஒரு வைரல் செய்தியாக கொரோனா தொற்றால் இறந்த குடும்பத்துக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் நிதி வழங்குவதாக ஒரு செய்தி வலம் வருகின்றது.
அந்த வைரல் செய்தியில், கொரோனா காரணமாக இறந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் வரை இழப்பீடு வழங்கவுதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாகப் பயனாளர்களின் ஆவணம், இறந்தவர்களின் விவரம் போன்றவற்றைச் சேகரிக்கிறது.
இந்த வைரல் செய்தி மறுத்து, உண்மை கண்டறியும் குழுவான PIB இது போலி செய்தி என்பதைக் கூறியது. மேலும் மாநில பேரிடர் நிதியின் கீழ் அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையும் PIB தெளிவுபடுத்தியது.
அரசாங்கம் மற்றும் அதிகாரிகளும் இதுபோன்ற தவறான மற்றும் போலி செய்திகள் குறித்து பலமுறை பொது மக்களை எச்சரிக்கை செய்து வந்துள்ளது. மேலும் சரிப்பாக்கப்பட்ட அதிகாரிகள், ஆவணங்கள் மற்றும் அது குறித்து அதிகாரிகள் வழங்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையை மட்டும் நம்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோன்று போலி மற்றும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது
source: https://www.latestly.com/social-viral/fact-check/families-of-poeple-who-died-of-covid-19-entitled-to-rs-4-lakh-compensation-under-sdrf-pib-fact-check-debunks-fake-claim-reveals-truth-2511343.html