மூன்று மாத இலவச ரீசார்ஜ் வழங்குவதாக TRAI ஆணையம் கூறியதா? உண்மை என்ன?

Update: 2024-08-02 02:32 GMT

மத்திய அரசின் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI மூன்று மாத இலவச ரீசார்ஜ் பேக்கை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அது மட்டும் கிடையாது அத்துடன் ஒரு லிங்க்கும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக இணையதள லிங்க் ( https://trai.gov.in@lhoff.cyou?free-recharge-offer=91721848234348) ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மை தன்மையை தற்போது பார்க்கலாம்.


“TRAI இலவச மொபைல் ரீசார்ஜ் வழங்குவதாக வைரலாகும் தகவல் போலி என்று PIB Fact Check தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக TRAIயும் தனது எக்ஸ் பக்கத்தில், வைரலாகும் தகவல் போலி என்று பதிவிட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு PIB Fact Check-ம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


தொடர்ந்து, வைரலாகும் இணைய லிங்கை ஆய்வு செய்ததில் வைரலாகும் லிங்கை கிலிக் செய்து பார்த்தபோது,   https://luckyj.cyou/#1722017606426 என்று மாறிவிடுகிறது. அதேசமயம், TRAIன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://trai.gov.in/ என்பது தெரியவந்தது. இதன் மூலம் வைரலாகும் லிங்க் ஒரு ஸ்பேம் என்பது தெரியவந்தது.தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக வைரலாகும் இணைய லிங்க் போலி ஆனது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News