செய்திகளை திரிக்கும் youturn ஊடகம் - தேசியக்கொடிக்கு அனுமதி வழங்கியதை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி அட்டூழியம்!

Update: 2022-08-14 06:37 GMT

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அனைவரின் இல்லங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.

தற்போது பாலிஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக, பருத்தி, பட்டு, கம்பளி அல்லது காதி துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை, இயந்திரத்தால் அல்லது பாலிஸ்டர் துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளின் விற்பனைக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.

இதற்கு முன்பாக, பருத்தி, பட்டு, கம்பளி அல்லது காதி துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது பாலிஸ்டர் மற்றும் இயந்திரத்தால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் தேசியக் கொடிக்கும் ஜிஎஸ்டி-க்கும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி செய்திவெளியிட்ட youturnஊடகம், ரிலையன்ஸ் பாலிஸ்டர் தயாரிப்பதால் தான், பாலிஸ்டரால் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது போல கூறியுள்ளது. தேசியக்கொடிக்கு வழங்கப்பட்ட அனுமதியை எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி, ஒரு நிவருவனத்துடன் தொடர்பு படுத்தி செய்திகளை திரிக்கும் வேலையில் இறங்கியிருப்பது அம்பலமாகிறது, 

Similar News