பொய் செய்தியை கண்டுபிடிப்பதாக சொல்லும் Youturn ஊடகமே பரப்பிய பொய்! தலித் எதிரான குற்றம் எங்கே அதிகம்?

Update: 2023-12-20 01:40 GMT

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள்: அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்திர பிரதேசம் முதலிடம் என்றும், இந்தியாவில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் குற்றங்களில் 27% உத்திர பிரதேசத்தில் நடப்பவை என்றும் youturn ஊடகம் செய்தி வெளியிட்டது. 

உண்மை என்ன?

நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலின்படி, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்கள், பட்டியலினத்தோருக்கு வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் பட்டியலினத்தோருக்கு எதிராக 1376 குற்றங்கள் நடந்திருக்கின்றன. 2018ஆம் ஆண்டில் பட்டியலினத்திவருக்கு எதிராக 1413 குற்றங்கள் நடந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 2019ஆம் ஆண்டில் 1144 குற்றங்கள் மட்டுமே பதிவாகின. ஆனால், 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து 1274 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2021ல் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது.

ஒரு மாநிலத்தின் குற்ற அளவுகளை ஒப்பிட வேண்டும் என்றால், எண்ணிக்கையை வைத்து மட்டுமே ஒப்பிடக்கூடாது. தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2020 - 2022 ல் உத்திரபிரதேசத்தில் 20.87% சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதுவே தமிழகத்தில் 38.22% சதவிகிதம் அதிகரித்துள்ளது. குற்றங்கள் கணக்கிடப்படுவது Crime Rate (Crime per Lakh Population) வைத்து தானே தவிர குற்றங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை. தமிழகத்தின் மக்கள் தொகை வேறு, உபி மக்கள் தொகை வேறு என்பது youturn தரப்புக்கு புரியவில்லையா? 

Similar News