100 மில்லியன் பயனாளர்களுக்கு இலவச இணையச் சேவையை அரசு வழங்குகிறதா? உண்மை என்ன?
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒரு வைரல் செய்தியாக சமூக வலைத்தளங்களில், 100 மில்லியன் பயனாளர்களுக்கு இலவச இணையச் சேவையை இந்திய அரசாங்கம் வழங்குவதாக வைரலாகி வருகின்றது. இந்த செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது, மேலும் இலவச இணையச் சேவைக்கான காலம் மூன்று மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் குழுவான PIB இதனை மறுத்து மற்றும் தற்போது வாட்ஸ் ஆப்பில் வலம்வரும் இந்த வைரல் செய்தி போலியானது என்பதைத் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அரசாங்கம் இதுபோன்ற திட்டத்தை அறிவிக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
இதுபோன்று ஆதாரமற்ற செய்திகளை அரசாங்கம் தெளிவுபடுத்துவது முதன் முறை அல்ல. முன்னர் புதிய IT விதிகளை அரசாங்கம் அறிவித்த போது, வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகள் மற்றும் அழைப்புகளை அரசு கண்காணிக்கும் என்ற வைரல் செய்தியும் போலியானது என்பதை PIB தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து PIB தெளிவுபடுத்தி ஒரு ட்விட்டை வெளியிட்டது மற்றும் இதுபோன்று செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பயனாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் தவறான மற்றும் போலியான செய்திகளைப் பரவுதற்கு முன்னர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளைச் சரிபார்க்கவும் அது மக்களைக் கேட்டுக்கொண்டது.
Source: ஜீ நியூஸ்